குவாரி உரிமையாளர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் குவாரி உரிமையாளர் நலச்சங்கத்தினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் குவாரி உரிமையாளர் நலச்சங்கத்தினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குவாரி உரிமையாளர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினாா்.
செயலாளர் நாராயண பெருமாள் சாமி, பொருளாளர் தனபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
குவாரி உரிமம்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விதிமுறைகளை மீறி கிரஷர், ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றிற்கும் நடை சீட்டு வழங்கப்படுவதாகவும், புதிய குவாரி உரிமம்கேட்டு விண்ணப்பித்து 120 நாட்களாகியும் அனுமதி கொடுக்காத நிலை நீடிப்பதாகவும், கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு உரிமம் வழங்காமல் ஒரே நபருக்கு 11 வகையான அனுமதி வழங்கி முறைகேடு நடந்துள்ளதாகவும், முறையாக குவாரி நடத்துவோரிடம் ஆதாய நோக்கத்தோடு மிரட்டல் விடுப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரிகளுக்கு மத்திய அரசு வழங்குவது போல் 30 வருட குவாரி உரிமம் மாநில அரசும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.