4 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது


4 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது
x

4 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 4 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தமிழ்த் தேர்வு நடந்தது. 4, 5-ம் வகுப்புகளுக்கு காலையில் தேர்வு நடந்தது. 6, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 10-ம் வகுப்புக்கு காலை 9.45 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. 7, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 4.30 மணி வரை நடந்தது. தேர்வினை ஆசிரியர்கள் கண்காணித்தனர். ஏற்கனவே 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு உடற்கல்வியல் தேர்வு கடந்த 23-ந் தேதி நடந்தது. 4 முதல் 10-ம் வகுப்புகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆங்கில தேர்வு நடக்கிறது. ஏற்கனவே கடந்த 22-ந் தேதி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேற்று கணிதம், விலங்கியல், விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிளஸ்-1 வகுப்புக்கு மதியம் 1.45 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடந்தது. மேலும் அவர்களுக்கு இன்று கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. 1 முதல் 3-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக காலாண்டு தேர்வு நடத்தப்பட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 1-ந் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 10-ந் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 6-ந் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது.


Next Story