வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்


வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
x

வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

திருப்பூர்

தாராபுரம்,

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பத்மாவதி தலைமை தாங்கி கூறியதாவது, ஒவ்வொரு துறைகளிலும்மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் துறை சார்பாக வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வணிகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியின் போது துறைத்தலைவர் புஷ்பலதா மற்றும் பேராசிரியர்கள் வெங்கட் கிருஷ்ணன், ஜாஹிதா பேகம் உள்பட அனைத்து துறை பேராசிரியர் கலந்து கொண்டனர். பிறகு வினாடி-வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

------------


Next Story