வினாடி-வினா போட்டி


வினாடி-வினா போட்டி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வினாடி-வினா போட்டி

விருதுநகர்

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான துளிர் வினாடி, வினா போட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு ஒன்றியத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வினாடி-வினா போட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் முத்துப்பாண்டி, பொன் சுப்புராஜ், இளையராஜா, பள்ளி செயலாளர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடக்கும் வினாடி-வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story