கிரீன் பார்க் பள்ளியில் வினாடி- வினா போட்டி

தென்காசி கிரீன் பார்க் பள்ளியில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்காசி கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் நிஷா மாரியப்பன் தலைமை தாங்கினார். ஆசிரியை மும்தாஜ் பக்ரீத் பண்டிகை குறித்து விளக்கி பேசினார். முன்னதாக மாணவர்களுக்கிடையே பல்வேறு பிரிவுகளில் வினாடி -வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிஷா மாரியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கிறிஸ்துதாஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





