சந்தூர் பகுதியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம்


சந்தூர் பகுதியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் காக்கங்கரையைச் சேர்ந்த வேலு (வயது40), பழனியம்மாள் (65) உள்ளிட்ட 10 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களை வெறி நாய் கடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story