வெறிநாய் தடுப்பூசி முகாம்


வெறிநாய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வெறிநாய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை கால்நடை மருத்துவமனை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கும் ரேபிஸ் எனப்படும் நோயை கட்டுப்படுத்துவதற்காக இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

நெல்லை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் முன்னிலை வகித்தார். செங்கோட்டை கால்நடை மருத்துவர் ஆபிரகாம் ஜாப்ரி வரவேற்று பேசினார். உதவி வனப் பாதுகாவலர் செல்வி பானுப்ரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தங்கப்பழம் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கையில் ரேபிஸ் குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றதுடன் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களும் வழங்கினர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் மனோகரன் காடுகள் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தென்காசி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் வெள்ளைப்பாண்டி, ஜெயபால் ராஜா, சிவகுமார் மற்றும் ராமசெல்வம் ஆகியோர் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியா் முருகேசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் முருகன், செங்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனா். முடிவில் நெல்லை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ஜான்சுபாஷ் நன்றி கூறினார்.


Next Story