செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்


செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

கமுதி,

அபிராமம் பேரூராட்சி மற்றும் அபிராமம் கால்நடை மருத்துவமனை சார்பில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், பேரூராட்சி துணை தலைவர் மாரி முன்னிலை வகித்தனர். அபிராமம் கால்நடை மருத்துவர் ஆஷா, கமுதி கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் சுப்பிரமணியன், பராமரிப்பு உதவியாளர்கள் ஆயிஷா, சிதம்பரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறி நோய் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு, வெறி நோய் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், கன்னி, சிப்பிபாறை, பொமேரியன், நாட்டு நாய் போன்ற நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், செல்லப்பிராணிகளை வாரம் ஒரு முறை குளிக்க வைக்க வேண்டும். சத்தான உணவுகள் அளிக்க வேண்டும், மூன்று மாதம் கழித்து அடுத்த கட்ட வெறிநோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என செல்ல பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.


Next Story