வெறிநோய் தடுப்பூசி முகாம்


வெறிநோய் தடுப்பூசி முகாம்
x

கலவை கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு கால்நடை மருத்துவமனையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை இணைந்து வெறிேநாய் தடுப்பூசி முகாம் மற்றும் விலங்குகள் வன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் முன்னிலை வகித்தார். மாம்பாக்கம் கால்நடை மருத்துவர் மோகன் வரவேற்றார்.

இதில் பல்வேறு நாய்களுக்கு வெறிேநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை மருத்துவர் தணிகைவேல் வனவிலங்கு தடுப்பு சட்டம், விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் பேரூராட்சி உறுப்பினர் யுவராஜ், பால் கூட்டுறவு சங்க தலைவர் ஐயப்பன், கூட்டுறவு சங்க செயலாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மழையூர் கால்நடை மருத்துவர் சரத்பாபு நன்றி கூறினார்.


Next Story