நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்


நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 28 Sep 2022 7:00 PM GMT (Updated: 28 Sep 2022 7:00 PM GMT)

நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாநகராட்சி தெருநாய் கருத்தடை மையத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை உரிமையாளர்கள் அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதேபோல் தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முகமது அப்துல்காதர், கால்நடை டாக்டர்கள் செந்தில்குமார், கிப்சன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story