செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி-விழிப்புணர்வு முகாம்


செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி-விழிப்புணர்வு முகாம்
x

செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி-விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பெரம்பலூர்

மங்களமேடு:

மங்களமேட்டை அடுத்துள்ள ஒகளூரில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர் குணசேகரன் முன்னிலை வசித்தார். ஒகளூர் அரசு பள்ளி மாணவர்களிடையே வெறிநோய் குறித்து எடுத்துக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய், பூனைகளை கொண்டு வந்தனர்.


Next Story