வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்


வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்
x

வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

கரூர்

கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சி கோடங்கிபட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன் தலைைம தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், துணை இயக்குனர் சரவணகுமார் உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து கால்நடை உதவி மருத்துவர்கள் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி 100-க்கும் மேற்ப்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். இந்த கால்நடை துறை உதவியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story