நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
களக்காட்டில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காட்டில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. நெல்லை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமை தாங்கினார். அம்பை உதவி இயக்குனர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
ஏர்வாடி முதுநிலை கால்நடை மருத்துவர் கிருஷ்ணசாமி, களக்காடு உதவி மருத்துவர் தங்கஜெயா ஆகியோர் நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போட்டனர். கால்நடை பராமரிப்பு உதவியாளர் ரமேஷ்ராஜா, திருக்குறுங்குடி ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 65 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story