ரவிந்திரநாத் எம்.பி. அதிமுகவில் மீண்டும் இணைப்பா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


ரவிந்திரநாத் எம்.பி. அதிமுகவில் மீண்டும் இணைப்பா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கிய தீர்ப்பு நகல் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கறிஞர் குழுவினருடன் தேர்தல் கமிஷனில் இன்று வழங்க உள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தேர்தல் கமிஷனில் உறுதியாகும். அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

அ.தி.மு.க.வினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இருக்கிறார். தி.மு.க.வின் 'பி' டீம் ஆக செயல்படும் அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? அவர் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் அ.தி.மு.க.வில் இல்லை. இந்த தகவல் பாராளுமன்றத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story