மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

கல்லல்,

கல்லல் அருகே ஆலவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டு நாச்சியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலவிளாம்பட்டி-மதகுபட்டி சாலையில் நடை பெற்றது. இதில் மொத்தம் 43 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை கோட்டணத்தம்பட்டி ரவி வண்டியும், 2-வது பரிசை வடுகபட்டி ரமேஷ், 3-வது பரிசை நாகப்பன்பட்டி ஹரிகரன் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை குச்சனூர் சுதாகர் வண்டியும், 2-வது பரிசை வீழனேரி சரவணன், 3-வது பரிசை வடுகபட்டி ரமேஷ் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை தேனி மாவட்டம் ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகஜோதி வண்டியும், 2-வது பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி, 3-வது பரிசை நரசிங்கம்பட்டி மலையாண்டி வண்டியும் பெற்றன.


Next Story