குதிரை, மாட்டு வண்டிகள் பந்தயம்


குதிரை, மாட்டு வண்டிகள் பந்தயம்
x

காளையார்கோவில் சவுந்திரநாயகி அம்மன், சோமேசுவரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் சவுந்திரநாயகி அம்மன், சோமேசுவரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

காளையார்கோவில் சவுந்திர நாயகி-சோமேசுவரர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் காளையார் கோவில்-தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 21 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலில் நடைபெற்ற பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை செவல்கண்மாய் ராமலிங்கம் நினைவாக சின்னவர் அர்ச்சுணன் வண்டியும், 2-வது பரிசை கல்லல் வெல்கம் பிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை மேட்டுப்பட்டி குமார் வண்டியும், 4-வது பரிசை காளையார்கோவில் திருஞானம் வண்டியும் பெற்றன.

மாட்டு வண்டி பந்தயம்

தொடர்ந்து நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவாக நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தஞ்சாவூர் பூக்கொல்லை காளிமுத்து வண்டியும், 2-வது பரிசை ஆலவிளாம்பட்டி முத்துலெட்சுமி மற்றும் ஒக்கூர் அண்ணாநகர் கணேஷ் போர்வெல்ஸ் வண்டியும், 3-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு, 4-வது பரிசை கொல்லங்குடி மாதவன் வண்டியும் பெற்றன.

சின்னமாடு

பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை கண்டனிப் பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும், 3-வது பரிசை சூரக் குண்டு கார்திபன் வண்டியும், 4-வது பரிசை பெரிய கண்ணனூர் கார்த்திக் வண்டியும் பெற்றன.

வெற்றி பெற்ற குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story