மாட்டுவண்டி பந்தயம்


மாட்டுவண்டி பந்தயம்
x

மானாமதுரை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

புரவி எடுப்பு விழா

மானாமதுரை அருகே உள்ள விளாக்குளத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவையொட்டி விளாக்குளம் கிராமத்தில் இருந்து மானாமதுரை வரை பெரிய மாடு, சின்ன மாடு பிரிவில் எல்லை பந்தயம் நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 ஜோடி மாடுகளும், அதற்கடுத்து நடந்த சின்னமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. சாலைகளில் இரு பகுதிகளிலும் காளைகள் சீறிப் பாய்ந்தன. சீறி சென்ற காளையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து காளைகளை பொதுமக்கள் உற்சாகப் படுத்தினர்.

பரிசு

இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் விளாக்குளம் கிராமத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன‌. மானாமதுரை- தாயமங்கலம் ரோட்டில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். விழா ஏற்பாடுகளை விளாக்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.


Next Story