மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

கடலாடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்புதிருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு ஒரு பிரிவாகவும், சின்ன மாடு 2 பிரிவுகளாகவும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மஞ்சநாயக்கன் பட்டி வீர ஜோதி என்பவரது மாடும், கள்ளந்திரி நகுலன் சேதுபதி, சேரன் செங்குட்டுவன் ஆகியோரது மாடுகள் 2-வதுபரிசையும் சீவலப்பேரி துர்கா என்பவரது மாடு 3-வது பரிசையும் பெற்றன. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி, மதுரை ஜெயந்திபுரம் அக்னி முருகன் 2-வது பரிசையும், மாத்தூர் சேரன் செங்குட்டுவன், தேரங்குளம் வெற்றி, புகழ்முனீஸ்வரன் 3-வது பரிசை பெற்றனர். சின்ன மாடு மற்றொரு பிரிவில் முதல் பரிசை மதுரை பரவையை சேர்ந்த சோனை முத்து,் இரண்டாவது பரிசை சொக்கலிங்கம் என்பவரது வண்டியும், மேலச் செல்வனூர் வீரக்குடி முருகன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி ஆகியோரது வண்டிகள் 3-வது பரிசையும் பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், குத்துவிளக்கும் கிராம நிர்வாக கமிட்டியினர் வழங்கினர்.


Next Story