மேலூர் அருகே பந்தயம்: கொட்டும் மழையிலும் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


மேலூர் அருகே பந்தயம்: கொட்டும் மழையிலும் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 10 Oct 2022 1:48 AM IST (Updated: 10 Oct 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே கொட்டும் மழையிலும் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே கொட்டும் மழையிலும் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி பந்தயம்

மேலூர் அருகே வெள்ளலூர்நாட்டு ஸ்ரீஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளலூர் நாட்டு மாட்டுவண்டி காளை மாடுகள் வளர்ப்போர் நலசங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. உறங்கான்பட்டி - மேலூர் சாலையில் 3 பிரிவுகளாக கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் தஞ்சாவூர், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 46 ஜோடி பந்தய மாடுகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டுப் போட்டியில் 10 ஜோடிகள் கலந்து கொண்டன. போக வர 8 மைல் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு தொகை ரூ.25 ஆயிரத்தை மேலூர் பல்லவராயன்பட்டி வர்ஷாஇளமாறன் வண்டி வென்றது. 2-ம் பரிசு ரூபாய் 20 ஆயிரத்தை புலிமலைபட்டி முனிச்சாமி வண்டியும், சுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் சமமாக எல்கைக்கு வந்து பரிசையும் சமமாக பிரித்து பெற்றுக்கொண்டன. 3-ம் பரிசு ரூபாய் 15 ஆயிரத்தை மட்டங்கிபட்டி காவ்யா வண்டியும், நான்காம் பரிசு ரூபாய் 5 ஆயிரத்தை வெள்ளநாயக்கம்பட்டி அழகர்பாண்டி வண்டியும் வென்றன.

சின்னமாடு போட்டி

சின்னமாடு போட்டியில் 36 ஜோடிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி போக வர 6 மைல் தூரம் இரண்டு சுற்றுகளாக பந்தயம் நடைபெற்றது. முதல் சுற்றில் முதல் பரிசு கொட்டாணிபட்டி தொட்டிச்சிஅம்மன் துணை சீமான்பார்த்தசாரதி வண்டியும், 2-ம் பரிசு தஞ்சாவூர் நடுகாவேரி கண்ணன் நாட்டார் வண்டியும், 3-ம் பரிசு கோட்டநத்தம்பட்டி ரவி ரித்தீஷ் வண்டியும், 4-ம் பரிசு கோட்டநத்தம்பட்டி மயில் கண்ணன் வண்டி, சந்திரன் நினைவாக சிவகுமார் வண்டியும் பரிசுகளை வென்றன.

இரண்டாவது சுற்றில் முதல் பரிசு உறங்கான்பட்டி சூறாவளி மந்தக்காளை நினைவாக தஸ்சிகா கார்த்திகேயன் வண்டியும்,, 2-ம் பரிசு புலிமலைப்பட்டி மாயழகு தேவர் வண்டி, 3-ம் பரிசு புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டி, 4-ம் பரிசு தேனி மாவட்டம் தேவாரம் வண்டி, ஆதி சிவன் துணை கப்பை வியாபாரி பாண்டி வண்டியும் வென்றன. பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். போட்டியின் போது அவ்வப்போது சாரல் மழை பெய்தது.


Next Story