அனுமதியின்றி ரேக்ளா பந்தயம்
தொண்டாமுத்தூர் அருகே அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடந்தது.
பேரூர்
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் தேவராயபுரம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் அனுமதியின்றி ரேக்ளா பந்த யம் நடந்தது.
இதில் நரசீபுரம், பேரூர், தீத்திபாளையம், தொண் டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 ரேக்ளா வண்டிக ளில் காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன.
தேவராய புரத்தில் தொடங்கி நரசீபுரம் வரை ரேக்ளா பந்தயம் நடந்தது. அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரேக்ளா பந்தயம் நடத்தப்படுகிறது.
அந்த நேரங்களில் ரோட்டில் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அதோடு விபத்து அபாயமும் உள் ளது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் சிரமம் உள்ளது.
எனவே அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.