வாகனங்களுக்கு அபராதம் விதிக்க ரேடார் கேமராக்கள்


வாகனங்களுக்கு அபராதம் விதிக்க ரேடார் கேமராக்கள்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

40 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க 3 முக்கிய ரோடுகளில் ரேடார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

கோயம்புத்தூர்
கோவை


40 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க 3 முக்கிய ரோடுகளில் ரேடார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.


ரேடார் கேமரா


கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விதிமீ றல்களை தடுக்கவும் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை- அவினாசி ரோடு, கோவை- சத்தி ரோடு, மற்றும் பாலக்காடு ரோடு ஆகிய 3 முக்கிய ரோடகளில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 தானியங்கி வேக அளவீடு கருவி (ரேடார் கேமரா) பொருத்தப்பட்டது.


முதல் கட்டமாக கோவை-அவினாசி ரோட்டில் ரேடார் கேரமரா பொருத்தப்பட்டு உள்ளது. இங்கு 40 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக செல்லும் வாகனங்கள் ரேடார் காமிரா மூலம் கண்டறிய முடியும். அப்போது அதிவேகமாக செல்லும் வாகனங் களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது.


விபத்து தடுப்பு


தமிழகத்தில் நெடுஞ்சாலைதுறை சார்பில் தானியங்கி வேக கட்டுப்பாடு அளவீட்டு கருவிகள் பொருத்தப்படுவது வழக்கம்.

ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக காவல்துறை சார்பில் அவினாசி ரோடு, பாலக்காடுரோடு, சத்திரோடு ஆகிய 3 ரோடுகளில் தானியங்கி வேக அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் வாகனங் களில் அதி வேகமாக செல்கிறார்கள். ரேடார் கேமரா பொருத் தப்பட்டு உள்ளதால் அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story