வரத்து குறைந்ததால் முள்ளங்கி விலை உயர்வு:தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.18-க்கு விற்பனை
வரத்து குறைந்ததால் முள்ளங்கி விலை உயர்வு காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.18-க்கு விற்பனையானது.
தர்மபுரி
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அதிக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக முள்ளங்கி விலை குறைந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ முள்ளங்கி ரூ.12-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சந்தைக்கு முள்ளங்கி வரத்து குறைந்ததால் நேற்று கிலோவிற்கு ரூ.6 விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ முள்ளங்கி ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.25 வரை விற்பனை ஆனது. முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story