சிவன் கோவிலில் தெப்ப திருவிழா


சிவன் கோவிலில் தெப்ப திருவிழா
x

பாளையங்கோட்டை சிவன் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கப்படும் திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சுவாமி-அம்பாளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

நேற்று இரவில் சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்திற்கு எழுந்தருளினார்கள். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து 11 முறை தெப்பத்தை சுற்றிவந்தனர். அப்போது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story