பெட்ரோல் தீர்ந்ததால் ஆத்திரம்... பைக்குக்கு தீ வைத்த நபர்...
சேலத்தில், பெட்ரோல் தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த நபர், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்,
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது, பெட்ரோல் தீர்ந்ததாக தெரிகிறது. பலமுறை வாகனத்தை இயக்க முயற்சித்தும் பலனளிக்காததால், பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து வாகனத்துக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக, மணிகண்டனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story