'வடை' இல்லை என்று கூறியதால் ஆத்திரம்: கொதிக்கும் எண்ணெயை டீ


வடை இல்லை என்று கூறியதால் ஆத்திரம்:  கொதிக்கும் எண்ணெயை டீ
x

போடியில் வடை இ்ல்லை என்று கூறியதால் கொதிக்கும் எண்ணெயை டீ மாஸ்டா் மீது ஊற்றிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 55). இவர், போடி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அந்த கடைக்கு 3 பேர் வந்தனர். அவர்கள் சிவராமனிடம் வடை கேட்டனர். அப்போது அவர் கடையில் இருந்த வடைகளை எடுத்து கொடுத்தார். ஆனால் அவர்கள் மேலும் வடை வேண்டும் என்று கேட்டனர். அதற்கு சிவராமன் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அங்கிருந்த கொதிக்கும் எண்ணெயை தூக்கி அவர் மீது ஊற்றினர். இதில் படுகாயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிவராமன் மீது கொதித்த எண்ணெயை ஊற்றியது போடி சர்ச் தெருவை சேர்ந்த கவுரி சங்கர், மின்வாரிய அலுவலக ரோட்டை சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story