கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்: பெண்ணை மிதித்து கொன்ற கணவர்
கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை மிதித்து கொன்றார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
சோழவந்தான்
கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை மிதித்து கொன்றார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சக்கரப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 37). லாரி டிரைவர். இவருடைய மனைவி சாந்தி(30). பஞ்சாட்சரம் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில் சாந்திக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பஞ்சாட்சரம் கண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய பஞ்சாட்சரம் மனைவியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி இருக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண்ணை மிதித்து கொலை
இதில் ஆத்திரம் அடைந்த பஞ்சாட்சரம், சாந்தியை அடித்து உதைத்து மிதித்து உள்ளார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பஞ்சாட்சரத்தை கைது செய்தனர்.