ராகுபெயர்ச்சி விழா


ராகுபெயர்ச்சி விழா
x

நாளை ராகுபெயர்ச்சி விழாவையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ராகு பெயர்ச்சி விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.40 மணிக்கு மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு ராகுபெயர்ச்சி அடைகிறார். விழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று மதியம் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை 4-ம்கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ராகு பெயர்ச்சி சிறப்பு பரிகார லட்சார்ச்சனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சி. சிவகுருநாதன், துணை ஆணையர் உமாதேவி, அறங்காவலர்கள் கோ. கண்ணையன், ரா. பானுமதி, அ.சின்னையன், சு. ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story