சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே கே.புதுக்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கே.புதுக்குடி விலக்கு-ராமேசுவரம் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 33 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி ஏ.டி.என் பூங்குளத்தான் வண்டியும், 2-வது பரிசை கோட்டையூர் சிதம்பரம் வண்டியும், 3-வது பரிசை மாவூர் ராமச்சந்திரன் வண்டியும், 4-வது பரிசை பெருஞ்சையூர் கார்மேகம் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மருங்கூர் முகமது மற்றும் கலுகுமை பெரியதம்பி வண்டியும், 2-வது பரிசை எஸ்.பி.பட்டினம் உமர் மற்றும் பட்டங்காடு காத்தாயி வண்டியும், 3-வது பரிசை மாவூர் பிரகன்யாமோகன் வண்டியும், 4-வது பரிசை மணிகண்டி மகாலிங்கம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.


Next Story