சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்து சென்றன.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நல்லாங்குடி-புளியால் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 56 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாப்பாங்கோட்டை பாக்கியம் மற்றும் ஏம்பல் யோகேஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை மருங்கூர் முகமது வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 21 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும், 3-வது பரிசை நம்பியூர் செல்வக்குமார் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.


Next Story