மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன,
மதுரை
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள நெல்லுகுண்டுபட்டியில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும் நிலையில் இந்தாண்டு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் தடையை மீறி வயல்வெளியில் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்ட மாடுபிடி வீரர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.மேலும் இந்த மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை பார்த்து ரசித்தனர்.
Related Tags :
Next Story