ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
நெகமம்
நெகமம் அடுத்த காளியப்பன்பாளையம், ரங்கம்புதூர், கக்கடவு, மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் 2-வது ஆண்டு ரேக்ளா பந்தயம், ரங்கம்புதூர் மேடு ரோட்டில் நடைபெற்றது. இதில் பழனி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி, மூலனூர், செஞ்சேரிமலை, சாளையூர், கரட்டுமடம், ஆனைமலை, வேட்டைகாரன்புதூர், கோட்டூர், மலையாண்டிபட்டினம், அங்கலக்குறிச்சி, காளியாபுரம், நெகமம், செட்டியக்காபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, எரிசனம்பட்டி, ஆவலப்பம்பட்டி, சடையபாளையம், காளியப்பம்பாளையம், தேவிபட்டணம், புரவிபாளையம், வடக்கிபாளையம், சமுத்தூர், மடத்துக்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், துங்காவி ஆகிய பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. 200 மீட்டர், 300 மீட்டர் தூர பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரேக்ளா பந்தையத்தை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.