ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்


ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்தன.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே புரவிபாளையம்-காட்டாங்காடு பிரிவு பகுதியில் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, காங்கேயம், திண்டுக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கலந்துகொண்டன. இதில் 2 பல் காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும், 6 பல் காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து இலக்கை நோக்கி சென்றதை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு தங்க காசு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மற்ற காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ரேக்ளா பந்தயம் நடந்த பகுதியில் வடக்கிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story