ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
பேரையூர், திருவரங்குளத்தில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை
ராகு, கேது பெயர்ச்சி Transit Rahu and Ketuதிருமயம் அருகே பேரையூரில் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக நாகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவரங்குளத்தில் சுயம்புலிங்க சிவன் கோவில், ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவில்களில் நவக்கிரகங்கள் உள்ள ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் விளக்கேற்றி பரிகாரம் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story