ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
காங்கிரஸ் கட்சிக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி ராகுல்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ராகுல்காந்தி பிறந்தநாள்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார்.
விழாவையொட்டி, காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பா.ஜ.க. ஆட்சியை அகற்றி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பபட்டன.
இதேபோல் திண்டுக்கல் நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, துணைத்தலைவர் அப்துல்ரகுமான், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம் மாநகராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வேடசந்தூரில் கொண்டாட்டம்
வேடசந்தூர் மார்க்கெட் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் வட்டார தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். கட்சிக்கொடியை வட்டார பொதுச்செயலாளர் நஸ்ரின்பானு ஏற்றி வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ரங்கமலை, வேடசந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பஷீர்அகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்ட பொதுசெயலாளர் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் செல்வன், ராஜன், வட்டார பொதுசெயலாளர் பகவான், வட்டார துணை தலைவர்கள் ஜாபர்அலி, தாமஸ், வடமதுரை வட்டார தலைவர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் பிரசன்னா, இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் கண்ணன், கிராம கமிட்டி நிர்வாகிகள் சக்திவேல், முனியசாமி, தங்கவேல், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.