பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே புல்லெட் பைக் ஓட்டிய ராகுல் காந்தி


பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே புல்லெட் பைக் ஓட்டிய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 27 Nov 2022 1:25 PM IST (Updated: 27 Nov 2022 1:26 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் கடந்த 23-ந்தேதி முதல் நடந்து வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று 5-வது நாளாக தொடர்ந்தது.

இந்தூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி முதல் நடத்தி வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த 23-ந்தேதி முதல் நடந்து வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. இதில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்து கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் இன்று 5-ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். மோவ் பகுதியில் இருந்து இன்று காலை ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரைக்கு இடையே ராகுல் காந்தி இன்று புல்லெட் பைக்கை ஓட்டினார். ஹெல்மட் அணிந்த படி ராகுல் காந்தி சிறிது தூரம் பைக் ஓட்டிச்சென்றார். ராகுல் காந்தி பைக் ஓட்டிச்சென்றதை அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.


Next Story