மலர் கம்பளத்தில் நடக்காமல் சாலையில் நடந்த ராகுல் காந்தி - காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தம்


மலர் கம்பளத்தில் நடக்காமல் சாலையில் நடந்த ராகுல் காந்தி - காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தம்
x

ராகுல் காந்தி வில்லுக்குறி பகுதியை வந்த போது, மலர் கம்பளம் விரித்து மலர்கள் தூவி காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

குமரி,

நாகர்கோவிலில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தியை மலர் கம்பளம் விரித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

மூன்றாவது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி வில்லுக்குறி பகுதியை வந்த போது, மலர் கம்பளம் விரித்து மலர்கள் தூவி காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

ஆனால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் மலர் கம்பள பாதையில் ராகுல் காந்தியை நடந்து செல்ல விடாமல் சாலையிலேயே நடத்திச் சென்றதால் வரவேற்பு அளிக்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் வருத்தம் ஏற்பட்டது.


Next Story