ராகுல்காந்தியின் விமானத்துக்கு வாரணாசியில் அனுமதி மறுப்பு: காங். குற்றச்சாட்டு
வாரணாசியில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
வாரணாசி,
ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. விமான நிலைய அதிகாரிகளுக்கு பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் அவர்கள் ஜனாதிபதியின் வருகையை ஒரு சாக்குப்போக்காக சொல்லி விமானம் தரையிறங்க அனுமதி மறுத்து இருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கேரளாவில் இருந்து வாரணாசிக்கு தனி விமானத்தில் வருகை தர ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்படாததால் ராகுல் காந்தியின் வாரணாசி பயணம் ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story