ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
ஈரோடு
ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில், அகில இந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கோவை மாவட்டம் இருகூர் ரெயில் நிலையத்தில் ஓய்வறை கட்டுவதை கைவிட வேண்டும். பணி இடமாறுதல்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். வாரத்தில் 4 நாட்கள் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும். 48 மணி நேரத்தில் ஓட்டுனர்கள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story