ரெயில்வே, வங்கி, எஸ்.எஸ்.ஐ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு


ரெயில்வே, வங்கி, எஸ்.எஸ்.ஐ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு
x

ரெயில்வே, வங்கி, எஸ்.எஸ்.ஐ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ரெயில்வே, வங்கி மற்றும் எஸ்எஸ்ஐ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போது கண்டிப்பாக மன அழுத்தத்தை தவிர்த்து தங்களை தயார்படுத்தி கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து தேர்வுகளை எழுத வேண்டும். பெரும்பாலும் மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவரை அதிகமாக தேர்வாகி கொண்டு வருகிறார்கள்.

நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் சரியான முயற்சி எடுக்காதது தான் காரணம். நல்ல தமிழ் வளமுள்ள மாநிலம், நல்ல வளம் சார்ந்த கல்வி அளிக்கக்கூடிய மாநிலம் பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளவர்கள் வசிக்கும் மாநிலம் இருந்தும் நாம் சரியான முறையில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகவில்லை.

இனிவரும் காலங்களில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதற்கான முயற்சிகள் எடுத்து தேர்வுகள் எழுத வேண்டும்.

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த பயிற்சி வழங்குவதற்கு காரணம் இங்கு இருந்து தான் பல வெற்றியாளர்கள் உருவாகியுள்ளார்கள்.

போட்டி தேர்வுக்கு எதுவெல்லாம் தேவை என்று மனதில் உள்வாங்கி படிக்க வேண்டும். அதோடு கஷ்டப்பட்டு படிக்காமல் விரும்பி படிக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் மட்டுமே இத்தேர்வில் வெற்றி பெற முடியும், என்றார்.

இதில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குனர் (கோவை மண்டலம்) கருணாகரன், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மற்றும் போட்டித்தேர்வர்கள் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.


Next Story