ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

ஈரோடு-சென்னிமலை ரோடு ரெயில்வே பணிமனை அருகில், டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஆர்.இ.யு. உதவி பொதுச்செயலாளர் பிஜூ தலைமை தாங்கினார்.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் உள்ள சூழலில் போனஸ் கணக்கிட பயன்படுத்தும் ரூ.7 ஆயிரம் எனும் உச்ச வரம்பை ரத்து செய்ய வேண்டும். உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். 2023-2024-ம் நிதியாண்டில் ரெயில்வேயின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக போனஸ் நாட்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ரெயில்வே ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.


Related Tags :
Next Story