ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

காட்பாடி ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்

காட்பாடி

சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் காட்பாடி கிளை சார்பில் காட்பாடி ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.

ஆலோசகர் நரசிம்மராவ், காட்பாடி கிளை தலைவர் ஜோசப் விஜயகுமார், செயலாளர் கிரிஸ்குமார், துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நரேஷ்குமார் வரவேற்றார்.

தென்னக ரெயில்வேயில் காலியாக உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரெயில் நிலைய மேலாளர், ரெயில் டிரைவர்களுக்கு ஓ.டி. பணி வழங்க வேண்டும்.

ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டிப்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர்கள் பிரேம்குமார், பிரபாவதி, விஜயகுமார், பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் துணை செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

---

Image1 File Name : 10814711.jpg

----

Reporter : M. MOHAN Location : Vellore - KATPADI

1 More update

Related Tags :
Next Story