திருத்துறைப்பூண்டியில் ஒரு மணி நேரம் ரயில்வே கேட் மூடல்
அகஸ்தியம்பள்ளிக்கு நேற்று ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி திருத்துறைப்பூண்டியில் ஒரு மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அகஸ்தியம்பள்ளிக்கு நேற்று ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி திருத்துறைப்பூண்டியில் ஒரு மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்சேவை தொடக்கம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளிக்கு நேற்று ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாலை 6 மணிக்கு ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் திருத்துறைப்பூண்டியில் 6 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் இரவு 7 மணிக்கு தான் ரெயில் சேவையை தொடங்குவதற்கான கொடி கொடி அசைக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் மூடி இருந்ததால் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, வேளாங்கண்ணி, நாகை, நாகூர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
ரெயில்வே கேட் திறந்த உடன் இந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை போலீசார் ஒரு மணிநேரம் போராடி சீரமைத்தனர்.