ரெயில்வே அதிகாரி திடீர் சாவு


ரெயில்வே அதிகாரி திடீர் சாவு
x

நெல்லைக்கு ரெயிலில் வந்த ரெயில்வே அதிகாரி திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 62). இவர் சென்னை ரெயில்வே அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி கமலா. இவர்களின் மூத்த மகன் சென்னையில் வசித்து வருகிறார். கணவன்- மனைவி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள மகனின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் புறப்பட்டனர்.

ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது படுத்திருந்த சந்திரமோகன் எழுந்திருக்க வில்லையாம். இதனையடுத்து டாக்டர் மற்றும் ரெயில்வே போலீசார் சென்று பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. சந்திரமோகன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story