ரெயில்வே சுரங்கப்பாதை பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் சேவையில் மாற்றம்


ரெயில்வே சுரங்கப்பாதை பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் சேவையில் மாற்றம்
x

ரெயில்வே சுரங்கப்பாதை பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் யார்டு பகுதியில் (13-ந் தேதி ) நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 13-ந் தேதி ஈரோடு - நெல்லை செல்லும் விரைவு ரெயில் (வ.எண்.16845) திண்டுக்கல்- நெல்லை இடையேயும், நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (வ.எண்.16846) நெல்லை,திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

கோவை-நாகர்கோவில் சந்திப்பு விரைவு ரெயில் (வ.எண்.16322) திண்டுக்கல் நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில் சந்திப்பு- கோவை விரைவு ரெயில் (வ.எண்.16321) நாகர்கோவில் - திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

பாலக்காடு சந்திப்பு- திருச்செந்தூர் விரைவு ரெயில் (வ.எண்.16731) திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையேயும், திருச்செந்தூர்- பாலக்காடு சந்திப்பு விரைவு ரெயில் (வ.எண்.16732) திருச்செந்தூர், திண்டுக்கல் இடையேயும், பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரெயில் (வ.எண்.22627) திருவனந்தபுரம் இடையேயும், திருவனந்த புரம்-திருச்சி விரைவு ரெயில் (வ.எண்.22628) திருவனந்தபுரம், விருதுநகர் பகுதியாக ரத்து செய்யப்படும்.

மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் விருதுநகர், தூத்துக்குடி இடையேயும், தூத்துக்குடி - மைசூர் செல்லக் கூடிய விரைவு ரெயில், (வ.எண்.16235) தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

தாம்பரம்-நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20691) திருச்சி-நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில்-தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20692) நாகர்கோவில், திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

குருவாயூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.16128) நாளை (12-ந் தேதி) நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.

நாகர்கோவில் சந்திப்பு- மும்பை சி.எஸ்.எம்.டி. செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண் 16340) (13-ந் தேதி ) நாளை மறுநாள் நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பையை சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story