காங்கயம் குண்டடம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை
காங்கயம் மற்றும் குண்டடம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
காங்கயம் மற்றும் குண்டடம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சூறாவளி காற்று
இந்த ஆண்டு சாரல் மழை கை கொடுக்காத நிலையில் காங்கயம், குண்டடம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மழை பெய்யுமா? பெய்யாதா? என விவசாயிகளும், ெபாதுமக்களும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணி முதல் 5¾ மணிவரை காங்கத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக காங்கயத்தில் ேபாக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அது போல் காங்கயத்தை சுற்றி உள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக காடுகளில் புற்கள் வளரும் என்றும், இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு வராது என்றும் விவசாயிகள் கூறினர்.
குண்டடம்
குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இங்கு கால்நடைகள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். காடுகளிலும் புற்கள் கருகி போன நிலையில் திடீரென நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை மரங்களில் தென்னை ஓலைகள் தூக்கி வீசப்பட்டன. ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆனால் இப்பகுதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மழையினால் தீவன பயிர்கள் பயிர் செய்யவும் குடிநீர் தட்டுப்பாடும் குறையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.