பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்றுடன் கனமழை


பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்றுடன் கனமழை
x
தினத்தந்தி 10 Oct 2023 7:00 PM GMT (Updated: 10 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சித்தேரி, பள்ளிப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மதியம் 2 மணி முதல் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் பல்வேறு இடங்களில் வாழை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்தன. இந்த மழையால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது. கனமழையால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 5-வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.


Next Story