திருப்புவனத்தில் மழை
திருப்புவனத்தில் மழை பெய்தது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு லேசான தூறல் மழை பெய்தது.இதனால் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது. இந்தநிலையில் சுமார் 10 மணி அளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. நேற்று காலை6 மணி வரை மின்வினியோகம் சீராகவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, மின் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளது. அந்த பழுதை சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்றனர். காலை 6 மணிக்குமேல் நகர் பகுதி முழுவதும் மின் வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story