ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை
ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் கோவில்- பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ராம தீர்த்தம் முதல் சீதா தீர்த்தம் வரையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். சாலையில் மழைநீர் தேங்கியதை நகரசபை தலைவர் நாசர் கான் நேரில் பார்வையிட்டு உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீர் நகராட்சி மூலம் மோட்டார் வைத்து வெளியேற்றப் பட்டது. கடந்த சில வாரங்களாக ராமேசுவரம் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் அருகே வழுதூர், குயவன்குடி, பெருங்குளம் உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் மழை பெய்த நிலையிலும் நகர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.