காளையார்கோவில் பகுதிகளில் மழை
காளையார்கோவில் பகுதிகளில் மழை பெய்தது.
சிவகங்கை
காளையார்கோவில்,
காளையார்கோவில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகம் திரண்டு வந்தது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் சுமார் 4 மணி நேரம் காளையார்கோவில் நகரில் மின்தடை ஏற்பட்டது.
Related Tags :
Next Story