திருப்புவனத்தில் விடிய, விடிய மழை
திருப்புவனத்தில் விடிய, விடிய மழை பெய்தது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் அடித்து வந்தது. நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு இரவு 10 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மேல் நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் கிராம பகுதியில் சாலைகள், வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் பள்ளமான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த தொடர் மழையால் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வெப்ப தாக்கம் குறைந்து குழுமை சூழ்ந்தது. மழை பெய்து கொண்டிருக்கும் போதே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். நேற்று காலை நிலவரப்படி 51 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story